வசூலை வாரி குவிக்கும் #Thangalaan!

தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம்…

தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தங்கலான் திரைப்படம் 19-ம் நூற்றாண்டில், கோலார் தங்க வயலில் தங்கம் எடுக்க அழைத்துச் செல்லப்படும் தமிழக மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்துகொண்டு இருந்தாலும், படத்தின் கதை, இயக்கம், நடிகர்களின் அற்புதமான நடிப்பு, இசை ஆகியவற்றிற்காக ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இத்திரைப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் தங்கலான் திரைப்பட கலைஞர்களுக்கு நடிகர் விக்ரம் தடபுடலாக விருந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.