29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நலத்திட்டங்களின் சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் செய்யப்பட்டுள்ள சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றி நடந்தால் உலகம் அமைதியாக திகழும் என்றார். அவரது போதனைகளின்படி அனைவரிடமும் அன்பு செலுத்தும் அரசு திமுக அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சிறுபான்மையினர் நலனிற்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் முதலமைச்சர் கூறினார். தமது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு நிறைவேற்ப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்.

மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம்  மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்று திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடை பாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர்,  அந்த உதவித் தொகை கிடைப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பது தமது கடமை என்றும் அவர் கூறினார்.  விழாவில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading