#CineUpdate – ஆக.31ல் ‘மெய்யழகன்’ இசை வெளியீடு!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும்…

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின்பு பல முன்னாள் மாணவ, மாணவியர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புக்கள் நடைபெற்றன.

தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும்.

படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் செப்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆக.31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ ரிலீஸ் ஆகும் இடம் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.