#CineUpdate | அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில்…

#CineUpdate | Arjun Das, Aditi Shankar co-starrer film shooting completed!

நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இந்நிலையில், சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு பாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.