சினிமா டப்பிங் யூனியன் தேர்தல்… நடிகர் ராதாரவி மீண்டும் வெற்றி!

சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில், 313 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதா ரவி வெற்றி பெற்றார். தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான…

சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில், 313 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதா ரவி வெற்றி பெற்றார்.

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்,  விருகம்பாக்கத்தில் உள்ள AKR மஹாலில் நேற்று நடைபெற்றது.  இந்த தேர்தலில் நடிகரும்,  நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.  இந்த தேர்தலில் மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகின.  அதில், ராதாரவி 662 வாக்குகளும்,
ராஜேந்திரன் 349 வாக்குகளும்,  சற்குணராஜ் 36 வாக்குகளும் பெற்றனர்.  இந்த நிலையில்,  313 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதா ரவி வெற்றி மீண்டும் பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.