சென்னை வெங்கம்பாக்கத்தில் கோடை விடுமுறையில் மாணவர்களின்
உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்க, வீரக்கலை சிலம்ப பயிற்சி பள்ளி
சார்பாக கடற்கரையில் சிலம்ப பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வண்டலூர் அடுத்த வெங்கம்பாக்கத்தில் வீரக்கலை சிலம்ப பயிற்சி
பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கோடை சிறப்பு சிலம்பம் கற்கும் முகாமில் சிறுவர்,
சிறுமியர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை 60 பேர் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், அவர்களுக்கு காலை மற்றும் மாலை சிறப்பு பயிற்சிகள்
அளிக்கப்பட்டது.
மேலும், கலந்து கொண்ட மாணவர்கள் வீட்டில் செல்போன் மற்றும் கணிணி
போன்ற மின்ணணு பொருட்களுடன் நேரம் செலவிடுவதை விட, சிலம்ப பயிற்சியில்
ஈடுபட்டது மிகுந்த மகிழ்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆற்றலை அதிகரிப்பதாக
உற்சாகமாக தெரிவித்தனர், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு மான் கொம்பு,
வேல் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும், பயிற்சியின் ஒரு பகுதியாக கடற்கரை ஓரமாக மணலில் ஓடுவது,
மணலை கைகளால் தோண்டுவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கடல் அலைகளில் நின்றவாறு சிலம்ப பயிற்சி மேற்கொள்வது
போன்ற கோடைக்கேற்ற இதமான கடல் அலை பயிற்சி வழங்கப்பட்டது என்றும் கூறினார்
-கு. பாலமுருகன்







