திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்…!

முதலமைச்சர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக விஜய், மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை சந்தித்தார்.

தொடர்ந்து இன்று ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், தற்போது விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போதுஅமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.