ராணி மேரி கல்லூரி வளாகத்தில் ரவீந்திரநாத் தாகூர் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் மே 7, 1861 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவர் …

சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் மே 7, 1861 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவர்  தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என்ற பன்முகத்திறன் கொண்டவர். அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ படைப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்று, ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையையும் அவர்  பெற்றார்.

இத்தகைய சிறப்பு மிக்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை, ராணி மேரி கல்லூரியில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் நடைபெற்ற 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.