எழுவர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்!

தற்போது சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் முதல்வர் பழனிசாமி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “எழுவர் விடுதலை…

தற்போது சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் முதல்வர் பழனிசாமி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,

“எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக தவறான தகவல் பரப்பி வருகின்றது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால்தான் எழுவர் விடுதலை பாதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். மேலும்,

“இவர்களின் விடுதலை குறித்து திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகின்றது. நான் ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம் எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்துகிறேன்.” என முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பேசத்தொடங்கியுள்ள நிலையில் இந்த கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply