விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin! 

மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால்…

Chief Minister #MKStalin flagged off the Vilutal Rehabilitation Service Vehicle!

மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள 150 டன் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறந்த சாதனை புரிந்த மற்றும் சிறப்பாக சேவையாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். பின்னர், விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த நவ.25ம் தேதி உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.