மதுரையில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி,  குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்றது.…

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி,  குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார்.

இந்தநிலையில், முதல் நிகழ்வாக, இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதைத் தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர்,  தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.