பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்,…

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545 தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்த, அரசு முடிவு செய்தது.

அதன்படி, நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பள்ளியில் உள்ள சமையலறையை பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த அவர், மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறிவிட்டு, பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

அப்போது அருகில் இருந்த மாணவனுடன் அலவலாவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்து ஸ்டைலுக்காக வாட்ச் கட்டியிருக்கிறாயா என கேட்டார். அதற்கு ஆச்சிறுவன் நேரம் பார்ப்பேன் எனக்கூற வாட்ச் ஓடலயே படம் பார்ப்பியா… என் வாட்ச்ல டைம் பாத்து சொல்லு பாப்போம் என்று கூறி நகைச்சுவையாக மாணவுடன் உரையாடி மகிழ்ந்தார்.

பின்னர் மாணவ, மாணவிகளுக்கு சாக்லெட் வழங்கினார். அப்போது முதலமைச்சருக்கு ரோஜாப்பூ கொடுத்து மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.