முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டிற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு வாழ்த்துகள்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33…

“33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டிற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு வாழ்த்துகள்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டு கால மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.  இதனையடுத்து டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.  தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங்,  33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும்,  என் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதவிக் காலம் முழுவதும்,  பணிவு,  புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

குறிப்பாக,  சவாலான காலங்களில் உங்கள் தலைமைத்துவம் எனக்கு உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது.  உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகரும்போது, ஒன்றிய அரசுக்கும் மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பில் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  திமுக சார்பிலும்,  தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம்,  மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன்.  உங்கள் ஞானம் மற்றும் தொலைநோக்கு பார்வை  மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.