சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருசக்கர
வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அவர்களுக்குள்
நடுரோட்டில் சண்டையிட்டனர்.
அப்பொழுது அங்கு சாலைகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டு
இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டனர்..
மதுபோதையில் இருந்த அப்பெண்கள், சமாதானம் செய்ய சென்றவர்களிடம் சண்டையிட்டு ஒரு தொழிலாளியின் சட்டையை கிழித்தெறிந்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் முன்னிலையில் மதுபோதையில் இருந்த பெண்கள் மற்றும் இரண்டு நபர்களும் துப்பரவு தொழிலாளியை அடிக்க முயன்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துப்பரவு தொழிலாளி தன்னை தாக்கி தனது செல்போனை பறித்து சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.








