சென்னை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அதனடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றது. இதற்கிடையில், பெட்ரோல் மற்றும்…

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

அதனடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றது. இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நேற்று மத்திய அரசு சற்று குறைத்ததுள்ளது.

இந்த விலைக்குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று, விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.