சொத்துவரி கட்டாத வீடுகளுக்கு சீல் வைக்கப்படுமா?- சென்னை மேயர் விளக்கம்

சென்னையில் நீண்ட நாட்களாக சொத்துவரி கட்டாத வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவலை சென்னை மேயர் ப்ரியா மறுத்துள்ளார். வீடுகளில் சொத்துவரி பாக்கியை வசூல் செய்ய சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு…

சென்னையில் நீண்ட நாட்களாக சொத்துவரி கட்டாத வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவலை சென்னை மேயர் ப்ரியா மறுத்துள்ளார்.

வீடுகளில் சொத்துவரி பாக்கியை வசூல் செய்ய சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சீரமைக்கப்பட்ட சொத்து வரி தொடர்பாக சொத்து உரிமையாளர்களுக்கு bபருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

சொத்து வரியை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளுக்கு சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மாநகராட்சியின் சார்பில் மூன்று முறை நோட்டீஸ் வழங்கி ஆறு மாசம் அவகாசம் கொடுத்தும் சொத்து வரி செலுத்தாதவர்களின் வீடுகள் சீல் வைக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா மறுத்துள்ளார். சொத்து வரி செலுத்தாத வீடுகளுக்கும் சீல் வைக்கப்படும் என தவறான தகவல் பரவி வருவதாக அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.