ஐ.ஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர.
இந்த நிலையில் தற்போது சென்னை மண்டலங்களுக்கு உட்பட்ட இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
https://twitter.com/news7tamil/status/1752584987260375305
அதே போன்று தென் மண்டல ஐஜியாக பணியாற்றி வந்த கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.







