சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகா் ரயில்கள் நாளை (மே 12) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“செங்கல்பட்டு ரயில் நிலைத்தில் நாளை (மே 12) காலை 11.10 முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக நாளை காலை 9.25, 10 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக நாளை காலை 11.20, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக, விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரயிலில் (எண்: 22869/22870) மே 13 ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை கூடுதல் படுக்கை வசதிகொண்ட ஒரு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







