அதிவேக 1000… – சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!

சென்னை அணிக்கு எதிரா ஐபிஎல் போட்டியில் சதம் விளாசி சாய் சுதர்ஷன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி…

சென்னை அணிக்கு எதிரா ஐபிஎல் போட்டியில் சதம் விளாசி சாய் சுதர்ஷன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.

லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்து அபாரம் காட்டியது. இதையடுத்து 232 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ – யார் இந்த பாயல் கபாடியா?

இந்த போட்டியில் 51 பந்துகளில் 103 ரன்கள் விளாசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில்/அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 31 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், 25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த சாய் சுதர்ஷன், அவரது சாதனையை முறியடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.