திருவெற்றியூர் ஜெய்ஹிந்த் நகர் பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரின் மகன் பரத். 17 வயதான இவர் நேற்று(ஜூன்.15) எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றுள்ளார்.அப்போது தனக்கு நீச்சல் தெரியும் என்று தனியாக இறங்கி கடலில் குளித்துள்ளார்
அந்த நேரத்தில் திடீரென எழுப்பிய ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.
இந்த நிலையில் அவரது உடல் இன்று காலை கரை ஒதுங்கியதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலையறிந்த எண்ணூர் தீயணைப்பு துறையினர் கண்டெடுக்கப்பட்ட பரத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.








