தேர் விபத்து; கவிஞர் வைரமுத்து இரங்கல்

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். களிமேடு…

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று 94-வது ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக களிமேடு பகுதியில் தேர் சென்றபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து. இதனால், தேரில் பற்றிய தீயில் சிக்கிய 11 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைச் செய்தி: தேர் விபத்து; சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

“களிமேட்டுத் தேர்த் திருவிழாவில்
தஞ்சைத் தமிழர்களைத்
தாக்கிய மின்சாரம்
நெஞ்சைத் தாக்குகிறது

இறந்தார் குடும்பத்துக்கு
என் ஆழ்ந்த இரங்கல்

அய்யகோ மரணமே!

உனக்குப்
பார்வையுமில்லை;
பக்தியுமில்லை” என உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.