ஆயுத பூஜை, விஜயதசமி – இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரு நாட்களில் மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் அரசு விடுமுறை என்பதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு இரு நாட்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களான திங்கட்கிழமை (19-10-2026) மற்றும் செவ்வாய்க்கிழமை (20-10-2026) ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்படும்..

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிட இடைவெளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 07:00 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.