சந்திரயான் – 3 திட்டத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து மெதுவாக நிலவில் இறங்கும் பிரக்யான் ரோவரின் புதிய வீடியோ காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இன்று மாலை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/isro/status/1695026969807929460?s=20
வெறும் 30 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ, சந்திரயான் லேண்டரில் இருந்து பிரக்யான் எப்படி வெளி வருகிறது என்பதை துல்லியமாக காட்டுகிறது. இது தொடர்பாக இஸ்ரோ X இல் சுமார் இரண்டரை நிமிட வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டில், ‘சந்திரயான் 3 ரோவர் லேண்டரில் இருந்து வெளியேறி சந்திர மேற்பரப்பைத் தொட்டது’ என்று எழுதப்பட்டுள்ளது.







