31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

சந்திரயான் 3 தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் – இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் – 3  நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் ஆக.23-ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு  பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும். இதற்கான காலம் வெறும் 19 நிமிடம் தான்- ஆனால் ‘சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த 19 நிமிடங்களில் தான் உள்ளது. சந்திரயான்-3ல்  விக்ரம் லேண்டர் பாதுகாப்பாக தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய உதவுவதற்காக அமைக்கப்பட்ட கேமரா மூலம் எடத்த  படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

நேற்று சந்திரயான் 2 ஆர்பிட்டர் – சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இடையே தகவல் தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  ‘Welcome, buddy!’ என விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் வரவேற்றதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. சந்திரயான் 2 தோல்வியை தழுவியபோதும் அதிலிருந்த சந்திரயான் 2 ஆர்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை ஏற்படுத்தியிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதனால், சந்திரயான் 2 ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

“சந்திரயான் 3  திட்டமிட்டபடி செயல்பட்டு வருகின்றது. விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்கள் சந்திரயான் 3 ஐ நிலவில் தரையிறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். திட்டமிட்டபடி நாளை மாலை 06.04 சந்திரயான் 3 தரையிறங்கும். நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் மாலை  5.20 மணிக்கு  நேரலை செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading