32.4 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சந்திரயான் -3 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடங்கியது!

நாளை நிலவுக்கு அனுப்பப்படவிருக்கும் சந்திரயான் -3 விண்கலத்துக்கான கவுண்டவுன் இன்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படவுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து முடித்துள்ள நிலையில், இதற்கான 25.30 மணி நேர கவுண்டவுன் இன்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சந்திரயான் – 3 விண்கலம் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் சந்திரயான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிக எரிபொருளை நிரப்பும் வசதியுடன் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சந்திரயான் -3 விண்கலத்தை அனுப்புவதன் மூலம் விண்வெளித் துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கத்து. அதனால் இஸ்ரோ அனுப்பும் சந்திரயான் – 3 விண்கலத்தை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதற்கிடையில், விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் – 3 விண்கலம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான் -3 விண்கலத்தின் சிறிய மாதிரியை சாமி சன்னதியில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading