இரவு 10 மணி வரை எங்கெல்லம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்றது.

தற்போது மோன்தா புயலானது ஆந்திராவின் மசிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.