சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் – இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.  அதே போல் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிபோட்டியில் நுழைந்தது.

இந்த இரு  அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்ததது. நியூஸி. அணியின் தொடக்க வீரர்களாக வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். இதில் வில் யங் 15 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக கேன் வில்லியம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரச்சின் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் நிதானமாக விளையாடி  63 ரன்கள் குவித்தார். இதனிடையே டாம் லதாம் 14 ரன்களில் அவுட்டானர். இதையடுத்து வந்த மைக்கேல்  பிரெஸ்வெல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை அடித்து, இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி சார்பில் வருண் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களது சுழலில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.