கிட்டிப்புல் விளையாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் – வீடியோ இணையத்தில் வைரல்..!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கிட்டிப்புள் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு…

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கிட்டிப்புள் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் கிட்டிப் புள் விளையாடி மகிழந்தார். சுற்றி இருந்த மக்களையும் கிட்டிப்புள் விளையாடும்படி ஊக்கப்படுத்திய அவர், கில்லியை அடிக்க முடிந்ததா என்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கூறினார்.

தான் கிட்டிப்புள் விளையாடியது தொடர்பான வீடியோவை தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இன்று கில்லி தண்டா (கிட்டிப்புள்) விளையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் அனைவரும் கிட்டிப்புள் விளையாடிப் பாருங்கள். பின்னர் உங்களுக்கு அது பிடித்திருந்ததா, இல்லையா என்பதைச் சொல்லுங்கள்…?”
என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/JM_Scindia/status/1754423531771961730

இதையும் படியுங்கள் : பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் பாதிப்பு!

இந்த வீடியோ தற்போது X தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்த இந்த வீடியோவுக்கு லைக்குகளும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றன. X தள பயனர்கள் நேர்மறையான கருத்துகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.