லியோ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் படத்திற்கான முன்பதிவு புதிய சாதனை படைத்துள்ளது. இதனிடையே இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்தது.
லியோ படத்தில் டிரைலர் வரும் 5-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அதுகுறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாட்டில் லியோ ப்ரீ புக்கிங் அக்டோபர் 14-ம் தேதி முதல் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
#LeoCensoredUA 🧊🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo pic.twitter.com/Nv8MiUZlbQ
— Seven Screen Studio (@7screenstudio) October 4, 2023
இந்நிலையில் இன்னும் 15 தினங்களில் திரைக்கு வர உள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதனை படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்க்கத்தில் ஷேர் செய்துள்ளார். லியோ படத்திற்கான ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடிவரும் ரசிகர்கள், தற்போது இந்த செய்தியையும் கொண்டாடி வருகின்றனர்.