விரைவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் திறக்கப்படவுள்ளது. சென்னையில் வித்தியாசமாக பல உணவகங்கள் இருந்து வரும் நிலையில், சென்னை சென்ட்ரலில் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஒரு வித்தியாசமான முறையிலும்…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் திறக்கப்படவுள்ளது.

சென்னையில் வித்தியாசமாக பல உணவகங்கள் இருந்து வரும் நிலையில், சென்னை சென்ட்ரலில் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஒரு வித்தியாசமான முறையிலும் பழைய ரயில் பெட்டிகள் மறுசீர் செய்யப்பட்டு அதனை உணவகமாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் பழைய ரயில் பெட்டிகள் புதிதாக பல வசதிகளுடன் உணவகம் போன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது, இதில் பல்வேறு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அடுத்த ஓரிரு மாதத்தில் உணவகம் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நாள்தோறும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கில் வரும் மக்கள் தங்களின் பொழுதுபோக்கு மற்றும் வித்தியாசமான உணவு முறைகளை இங்கு அமைத்துக் கொள்ள இந்த இடம் ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அதற்கான பணிகள் மும்முரமான முறையில் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.