காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்பிக்கள் குழு இன்று சந்திக்கிறது.
டெல்லியில் நேடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு, காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. அடுத்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர், கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து, ஆணையத்தின் முடிவுகள் குறித்து விவரித்தார். இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு எம்பிக்கள் குழு இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை இன்று சந்திக்கிறது-
அப்போது தமிழகத்தை கோரிக்கை குறித்த மனுவை அளிப்பதுடன், காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.