ஏடிபி தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் கார்லோஸ் அல்காரஸ்!

ATP தரவரிசைப் பட்டியலில் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார் . அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் கைப்பற்றினார். இந்நிலையில், சர்வதேச டென்னிஸ்…

ATP தரவரிசைப் பட்டியலில் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார் .

அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் கைப்பற்றினார். இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த தரவரிசை பட்டியலில் கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

நோவக் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார். டேனியல் மெத்வதேவ் 3ம் இடமும், காஸ்பர் ரூட் 4 ம் இடமும் பிடித்துள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் கடந்த இரண்டு வாரங்களாக முதலிடத்தில் இருந்து வந்தார்.

அதே சமயம், சமீபத்தில் நடைபெற்ற குயீன்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், 7675 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

7675 புள்ளிகளுடன் முதலிடத்தில் கார்லோஸ் அல்காரஸ், 7595 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ஜோகோவிச், 5890 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் டேனியல் மெட்வதேவ் ஆகியோர் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.