“மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது” -உச்ச நீதிமன்றம்!

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பின்னர் 2018-ம்…

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பின்னர் 2018-ம் ஆண்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து மருத்துவமனை கட்டுவதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும், 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, 2019ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது.

இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.