திருவாரூரில் உள்ள சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 வழங்கிட வேண்டும் எனவும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.
—அனகா காளமேகன்







