கேன்டிடேட் செஸ்: 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்!

கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.  கேன்டிடேட்ஸ் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.  இதில் இந்தியா சார்பில்…

கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர். 

கேன்டிடேட்ஸ் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.  இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.  14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 12-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ்,  வைஷாலி வெற்றி பெற்றனர்.  பிரக்ஞானந்தா,  கோனெரு ஹம்பி டிரா செய்தனர்.  விதித் சந்தோஷ் பேபியானோ கருனாவிடம் தோல்வியுற்றார்.

குகேஷ் – அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை வீழ்த்தினார்.  ரஷ்யாவின் இயன் நெபோம்னியச்சியுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா டிரா செய்தார்.  அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா – இந்திய வீரர் விதித் சந்தோஷை வீழ்த்தினார்.  மகளிர் பிரிவில் வைஷாலி அன்னா முஸிஷுக்கினை வீழ்த்தினார்.  கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  12 ஆம் சுற்று முடிவில் இந்திய வீரர் குகேஷ், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா, ரஷ்யாவின் இயன் நெபோம்னியச்சி ஆகிய மூவரும் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

 

தமிழக வீரர் பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், இந்திய வீரரான விதித் சந்தோஷ் 5 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.  மகளிர் பிரிவில் டான் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.   கொனேரு ஹம்பி 6 புள்ளிகளுடன் 3வது இடத்தினை 3 வீராங்கனைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  வைஷாலி 5.5 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.