தமிழ்நாட்டில் பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து!

தமிழ்நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசாரணை வெளியிட்டுள்ளது.  பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்களின் வரத்து அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்வால்,…

தமிழ்நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசாரணை வெளியிட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்களின் வரத்து அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்வால், நடுத்தர மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தற்போது பேட்டரிகள் மூலம் இயங்கும் வாகனங்களை நாடி செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணத்தை ரத்து செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பெட்ரோல், டீசல் அல்லாத மெத்தனால், எத்தனால் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு  இனி தமிழ்நாட்டில் எந்தவொரு அனுமதிக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், சரக்கு வாகனம் தவிர்த்து 3 ஆயிரம் கிலோ எடைக்கும் குறைவான வாகனங்களுக்கும் இந்த அனுமதிக்கட்டண ரத்து உத்தரவு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.