வடக்கு டெல்லியின் ஆசாத் மார்க்கெட்டில் உள்ள நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட்டில் இன்று காலை 8.30 மணிக்கு திடீரென கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிக சுமை காரணமாக கட்டிடம் இடந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டிட விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா








