இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் மற்றும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த் ரிஷிசுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்த தேர்தலில் லிஸ் டிரஸ் 81,326 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக டிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் டிரஸ் இவர் பெற்றார்.
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தொழில்துறை மந்தநிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் லிஸ் டிரஸ் ஆட்சியைப் பிடித்தார். மேலும் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்தில், அந்நாட்டு உள்துறை அமைச்சராக இருந்த பிரித்தி படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தார்.
இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் கடும் நெருக்கடியை லிஸ் டிரஸ் சந்தித்து இருந்தார். இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








