சென்னை குரோம்பேட்டையில் 2 மணி நேரத்தில் பைபிளிலுள்ள 2 ஆயிரத்து 461 வசனங்களை ஒப்புவித்து இரண்டு சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை படூரை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன்கள் 10 வயதான அபிஷேக் இம்மானுவேல் மற்றும் 8 வயதான கெவின் எபிநேசர். தனியார்ப் பள்ளியில் பயின்று வரும் இவர்கள் இளம் வயதிலேயே நினைவாற்றல் மிக்கவர்களாக இருப்பதை அறிந்த பெற்றோர், சிறுவர்களை கிறிஸ்தவ புனித நூலான பைபிளைப் படிக்க வைத்துள்ளனர்.

அதன்படி பைபிளில் இடம் பெற்றுள்ள 150 அதிகாரத்தை உள்ளடக்கிய 2 ஆயிரத்து 461 வசனங்களை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைக்க விரும்பினர். இந்நிலையில், இருவரும் 2 மணி நேரம் 16 நிமிடத்தில் அனைத்து வசனங்களையும் கூறி உலக சாதனை படைத்துள்ளனர். இதனை அங்கீகரித்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் இருவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: