வசூலை வாரிக் குவித்த ‘டிமான்ட்டி காலனி 2’ – #OTTRelease எப்போது?

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக் குவித்து வரும்  ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில்…

Box office hit 'Demonty Colony 2' - When is #OTTRelease?

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக் குவித்து வரும்  ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் இப்படம் வெளியான 2வது வாரத்தில் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டது. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகின்றன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதன் மூன்றாம் பாகம், நான்காம் பாகம்கூட எடுக்கலாம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் வெளியானாலும் தமிழ்நாடு முழுக்க டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் இன்னும் பல ஸ்கிரீன்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இத்திரைப்படம் உலகளவில் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்தது.


இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் வருகிற செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஓடிடி தளமான ஜீ5ல் இத்திரைப்படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.