சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையிலிருந்து, மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மும்பையில் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.    கடந்த 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. …

சென்னையிலிருந்து, மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மும்பையில் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது. 

 

கடந்த 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.  அதனை தொடர்ந்து பயணிகள் அவசரகதவு வழியாக வெளியேற்றப்பட்டு விமானம் முழுக்க வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது.  இறுதியில் மிரட்டல் செய்தி போலி என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் நேற்று டில்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று சென்னையிலிருந்து, மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ – 5134’ என்ற விமானம் 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து,  மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.  உடனடியாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  தொடர்ந்து,  விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.  இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.