பாலிவுட்டில் களமிறங்கும் #FahadhFaasil – இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது…

Bollywood debut #FahadhFaasil - Do you know who the director is?

தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வென்றவர் ஃபகத் ஃபாசில்.  மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்,  தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் ஃபகத்.  சிறந்த கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

புஷ்பா , விக்ரம் மற்றும் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் அவரின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த நிலையில் தமிழில் சூப்பர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தனது அசாத்தியமான நடிப்பினால் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல்வேறு திரைப்படங்களுக்காக விருதுகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரான இம்தியாஸ் அலி இயக்கத்தில் இந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இம்தியாஸ் அலியும் ஃபகத் ஃபாசிலும் இணைந்து பணியாற்ற நல்ல கதை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்தியாஸ் அலி பாலிவுட்டில் ராக்ஸ்டார், ஹைவே, தமாஸா ஆகிய வெற்றிப் பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.

திரைக்கதையில் தனது வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்காக கவனம் பெற்ற இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் கடைசியாக வெளியான அமர் சிங் சமிகா படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.