கிரீஸ் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

கிரீஸ் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரீஸ் தீவின் தெற்கு கடற்கரை பகுதியில், படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 அகதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காணாமல் போயுள்ளனர். கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது படகில் இருந்து வர்த்தக கப்பல் ஒன்றில் ஏணி வழியே அகதிகள் ஏற முயன்றதால் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், பலர் நீருக்குள் விழுந்தனர். அப்போது அந்த வழியே வந்த மற்றொரு சரக்கு கப்பல் 20 பேரை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் இருந்து, வேறு 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உள்ளது. எனினும், படகில் 50 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து, கடலோர காவல் படை கப்பல்களும், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ விமானமும் மீட்பு பணிக்காக சென்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.