கங்கனா ரனாவத் வெற்றிக்கு எதிராக வழக்கு…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் கங்கனா ரனாவத் பதிலளிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சலப்…

மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் கங்கனா ரனாவத் பதிலளிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கனா ரனாவத், காங்கிரஸ் மூத்த தலைவர் விக்கிரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கங்கன ரனாவத் 5,37,002 வாக்குகளும், விக்கிரமாதித்ய சிங் 4,62,267 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இத்ந நிலையில், மண்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த கின்னார் பகுதியை சேர்ந்த லாயக் ராம் நெகி என்பவர், கங்கனா ரனாவத்தின் வெற்றிக்கு எதிராக இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   அவர் அந்த மனுவில் “தேர்தல் நடத்தும் அதிகாரி எனது வேட்புமனுவை தவறுதலாக நிராகரித்துவிட்டார்.  வனத்துறையின் ஓய்வுபெற்ற அலுவலரான என்னிடம் தேர்தலில் போட்டியிட குடிநீர்,  மின்வாரியம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து நிலுவையில்லா சான்றிதழ் கேட்டிருந்தனர்.

அதற்காக, ஒருநாள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், நான் சான்றிதழை சமர்ப்பித்தும் நிராகரித்துவிட்டனர்.  நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் பதிலளிக்க கங்கனா ரனாவத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.