முக்கியச் செய்திகள் தமிழகம்

வகுப்பறையில் ‘பர்த்டே பார்ட்டி’: ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்

பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் பிறந்தநாளுக்கு கேக்வெட்டி கொண்டாடிய ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்து பங்களாபுதூரில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவருக்கு கடந்த 17.06.2022 அன்று பிறந்தாள் வந்துள்ளது. இதனை முன்னிட்டு அப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் பிறந்த நாள் கேக் வெட்டி மணிகண்டன் கொண்டாடியுள்ளார்.

அதில் முதல் கேக் துண்டை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர் மணிகண்டனுக்கு ஊட்டி விட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் ஆசிரியர் மணிகண்டன் மற்றும் தலைமை ஆசிரியை என இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பிறந்தநாளுக்கு கேக்வெட்டி கொண்டாடிய ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காபூல் ஏர்போட்டில் கடும் நெரிசல்.. கேரள கன்னியாஸ்திரி தவிப்பு

Gayathri Venkatesan

கூட்டு பாலியல் வன்கொடுமை ? – வட மாநில இளைஞர்கள் கைது

Ezhilarasan

டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

Web Editor