பயோகான் வாங்கிய ‘தேர்தல் பத்திரங்கள்’ பற்றிய தகவல்! – கிரண் மஜும்தார் ஷா விளக்கம்!!

அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடைகள் தொடர்பாக பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தார்-ஷா விளக்கம் அளித்துள்ளார்.  இந்திய தொழில் துறையில் கிரண் மஜும்தார் ஷா மிகவும் பிரபலமானவர்.  பெங்களூரின் பணக்காரப் பெண்மணி என்று அறியப்பட்ட…

அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடைகள் தொடர்பாக பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தார்-ஷா விளக்கம் அளித்துள்ளார். 

இந்திய தொழில் துறையில் கிரண் மஜும்தார் ஷா மிகவும் பிரபலமானவர்.  பெங்களூரின் பணக்காரப் பெண்மணி என்று அறியப்பட்ட இவர் பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர்.  இந்நிலையில்,  தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரச்னையில் இவரும் சிக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு! உடனடியாக விசாரிக்க கோரிக்கை!

இந்த சம்பவம் குறித்து பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா தனது X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

” ஆதாயத்திற்காக தேர்தல் பத்திரங்களை எந்த ஒரு கட்சிக்கும் பயோகான் வழங்கவில்லை. கர்நாடகத் தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ₹5 கோடி நன்கொடையாக கொடுப்பதாக கூறப்படுவதும் உண்மை இல்லை.  இருப்பினும், தனிப்பட்ட அளவில் தான் தேர்தல் பத்திரங்களை வாங்கினோம்,  அதை ஜேடிஎஸ் மற்றும் பல கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்தேன்.  எனது நன்கொடைகள் வெள்ளைப் பணத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதியளிக்கும் கொள்கையின் அடிப்படையில் இருந்தன”

இவ்வாறு பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/kiranshaw/status/1769542282523668778?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1769542282523668778%7Ctwgr%5E1d8ad2bd19b9ff21cb1f64df6da7486042bfb124%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fcities%2Fbengaluru-news%2Fbiocons-kiran-mazumdar-shaws-political-donations-clarification-on-electoral-bonds-101710735852837.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.