முக்கியச் செய்திகள் இந்தியா

விவாதங்கள் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றம் கவலை அளிக்கிறது-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

விவாதங்கள் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது கவலை  அளிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்தார்.

காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் ராஜஸ்தான் கிளையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட 75வது ஆண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அவர் கூறியதாவது:
சட்டமியற்றும் அவையின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. நம்மிடம் அரசாங்கமும் அங்கு சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கும் பொறுப்பாகும். இருப்பினும், முழுமையான விவாதம் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான இடம் குறைந்து, ஆரோக்கியமான விவாதம் இல்லாமல் ஆகிவிட்டது.

அரசியல் எதிர்ப்பு என்பது பகையாக மாறிவிடக் கூடாது. ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாநில சட்டமன்றம் கூடும் குறைந்தபட்ச நாட்களின் எண்ணிக்கையை அரசியலமைப்பு குறிப்பிடவில்லை என்றாலும், நீண்ட நாட்கள் சட்டமன்றம் கூடினால் குடிமக்கள் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சமுதாயத்தை ஒன்றாக இணைக்கக்கூடியது நீங்கள்தான் (சட்டமன்ற உறுப்பினர்கள்). நான் குறிப்பிட்டுள்ள சட்டமன்ற அமைப்புகளில் விவாதம் இல்லாதது விமர்சனம் அல்ல. எனது ஒரே கவலை, சட்டத்தை இயற்றுவதில் உள்ள குறைபாடுகளால் நீதித்துறை மீது சுமத்தப்பட்ட சுமை. மசோதாக்கள் முழுமையாக விவாதிக்கப்பட்டால், நமக்கு சிறந்த சட்டங்கள் கிடைக்கும்.

இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாளுமன்ற ஜனநாயக நாடு. ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு மிக முக்கியமானது. சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் சாமானியர்களின் அபிலாஷைகளுக்கும் உண்மைக்கும் இடையே பாலமாகச் செயல்படும் நீதித்துறை, முற்போக்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் கதையை எழுதியுள்ளது.

இளைஞர்கள் ஜனநாயகத்தின் அடிப்படை. இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள். எனவே, இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வும் அறிவும் பெற்று ஜனநாயக அமைப்பில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ரமணா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தையின் பாலினம் அறிந்து கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு!

Jayapriya

மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தை

G SaravanaKumar

ஈரோடு – பழனி இடையேயான ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் – எல்.முருகன்

Gayathri Venkatesan