பீகார் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவர்களின் பெயர் நீக்கம்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

பீகாரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களை அந்த மாநில கல்வித்துறை நீக்கியுள்ளது. கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவின்பேரில், நீண்ட காலமாக வராத மாணவர்களின் பெயர்களை…

பீகாரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களை அந்த மாநில கல்வித்துறை நீக்கியுள்ளது.

கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவின்பேரில், நீண்ட காலமாக வராத மாணவர்களின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அவர் மாநிலம் முழுவதும் குழுக்களை அனுப்பி, பள்ளிகளை ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை தினசரி கண்காணித்து வந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து பெற்றோர் சரியான காரணத்தை கடிதம் மூலம் சமர்ப்பிக்குமாறு கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பலர் பதில் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், சுமார் 3,32,000 பேரின் பெற்றோர் எந்த பதிலும் அளிக்காததால் கல்வித்துறை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு மாணவரும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது, அவ்வாறு தவறினால், சரியான காரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.