ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், போர் நிறுத்த நடவடிக்கை தொடர்பாக இந்தியாவுடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோபைடன், ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார். ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பல பொருளாதாரத்தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்த அவர், நான்கு ரஷ்ய வங்கிகள் மீது பொருளாதாரத்தடை விதிப்பதாகவும் பைடன் அறிவித்தார்.
மேலும், சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகள் தடுக்கப்படும் எனவும் கூறினார். உக்ரைனுக்கு அமெரிக்க படைகளை அனுப்ப மாட்டோம் என அறிவித்த அவர், ரஷ்ய அதிபரின் செயலால் ஐரோப்பிய கண்டத்திற்கு ஆபத்து நேரிட்டுள்ளதாகவும், போரினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ரஷ்ய அதிபர் புதினே பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறினார்.
ரஷ்ய-உக்ரைன் போர் தொடர்பான செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
அதோடு, ரஷ்யாவின் சைபர் தாக்குதலை சந்திக்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்வும், போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியாவுடனும் பேசி வருவதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.








