ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடியில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாஸின் தொகுதி மேம்பாடு நிதி ரூபாய் 25 லட்சம் மதிப்பில், இறகு பந்து உள்வியைாட்டு அரங்கம் 2500 சதுர அடியில் அமைய உள்ளது. இதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
துணை தலைவர் கமலா சேகர், செயலர் அலுவலர் ராமபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்துபீவி ஷாஜகான் , சமீம்மிஷா ஷாஜகான் ஆகியோர் பூஜைக்கான புனித நீரையும், முதல் செங்கல்லையும் எடுத்து தொடங்கி வைத்தனர். மேலும் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.பி.குமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி விமல் இளநிலை பொறியாளர் குமரேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ம.க.பாலு, பரமேஸ்வரி சரவணன் உள்ளிட்டோர் பலர் இதில் கலந்துக்கொண்டனர்.
—அனகா காளமேகன்






